December 17, 2011

ஒரு காதல் பொழுது -2


"அப்பா...
உன் கவிதை வர்ணனையில் இருப்பது அம்மாவா..?"

"ஆமா...தங்கம்..!!" 

"ஆனா...அந்த அளவிற்கு அழகா இல்லையே அம்மா...
பொய் தானே அதெல்லாம்..?"

"இல்லையே எல்லாம் உண்மை...?!"

"எப்படிப்பா..?"

"ம்ம்ம்...உனக்கு ஒரு காரியம் ஆக யார்கிட்ட போய் கேட்பாய்..?"

"அம்மாகிட்ட..!!"

"குட்...அம்மா யார்கிட்ட கேட்பாங்க..?"

"உங்ககிட்ட..?!!"

"அதுமாதிரிதான் இதுவும்...எனக்கு "காதல்" ஆக 
கவிதை வழியாக...சொன்னேன்...
கவிதை...எனக்கு உங்க அம்மாவை கொடுத்துச்சு..?!
உனக்கு சைக்கிள் கிடைச்சதும் 
அம்மாவை எப்படி "நல்ல அம்மா" அப்பிடின்னு சொன்னியோ...
அதுமாதிரிதான் என் கவிதை வர்ணனைகளும்..!!
புரிஞ்சுதா...செல்லம்..?"

அவன் உடனே 
சமையல் அறை ஓடி...
"என் செல்ல பூஸ்ட்டே அம்மா...!?" என்று சொல்லி சிரித்தான்.

அவள் கண்ணுருட்டி... 
"என் செல்ல பூஸ்ட்டே புஜ்ஜி...!? என்றாள். 

நானும் சேர்ந்துகொண்டேன்..
"என் செல்ல பூஸ்ட் குட்டிகளா..!?!"
என...

August 24, 2011

கவிதையின் கவிதைகள்..

எதற்காக சேர்த்து வைத்திருக்கிறாய்.?
என்று மட்டும் கேட்டு விடாதே...
நீ வீசியெறிந்த
"சாக்லெட்" காகிதங்களில் இருக்கும்
"காதல்"
வாசனை போய் விடும் 

காதலா..!?
**********************************************
பார்வைகள் நெம்பும்போது
ஏன்தான் பருவமடைந்தேனோ..?
என சலித்ததுண்டு...,
என்னை பைத்தியமாக்கும்
உன் காதல் கிடைத்தபின் புரிந்தது...
"உனக்கான பரிசாகத்தான்
இத்தனையும்" என்று..!!
******************************************
வாகனம் ஓட்டும்போது
கைபேசி எடுக்காதே..?!
கவனி...நீ இப்போது தனி ஆளில்லை...
உன்னை நம்பி
நானும்...காதலும்..!!
****************************************
நீ கேட்காத நேரம் பார்த்து
கொடுக்க வேண்டும்..!! என
சிறுக சிறுக
"முத்தம்" சேர்த்து வைத்திருப்பேன்
ஆசையாய்.....?!
நீயோ..சதா கேட்டு ஏமாற்றமடைய 

செய்வாய்..!!.

முத்தமில்லாமலே
முடிந்து விடும் 

பொழுது.

August 20, 2011

அழகுதோஷம் நீ..!!மறந்து விட்டாயா..? என  
கேட்பதற்கு பதில்..
மறித்து விட்டாயா..? என்று 
கேட்டிருக்கலாம் நீ....., 

உன்னை 
மறக்க செய்யும் 
எல்லா 
கேளிக்கைகளையும் 
மறுத்து வந்திருக்கிறேன் 
தொடர்ந்து..

ஏனென்றால் 
உன்னை மறப்பதென்பது 
முழுமையாய் 
இறப்பதற்கு சமானம்..!!

கண்கள் சலிக்காத ஒரே ஓவியம் 
நீ -என் 
உயிர் பதித்துக்கொண்ட ஒரே உலகம் 
நீ...!!

எத்தனை பெரிய மறதிக்காரனுக்கும் 
விதிவிலக்கு நீ..
எத்தனை பெரிய மருத்துவனுக்கும் பிடித்து போகும் 
அழகுதோஷம் நீ..!!

பெண்ணினத்தில்....
அழகு ஜென்மம் நீ...!!
ஆண்ணினத்தின்...
பல ஜென்ம கனவு நீ..!!

நமக்கு பின் 
காதலிக்க தொடங்கியவன் 
கைகுழந்தையோடு குல தெய்வ கோவிலுக்கும் 
போய் விட்டான்....,
இன்னும் 
நம் காதலில் 
நான் 
வெறும் பார்வையாளனாக மட்டும்...!! 

August 9, 2011

காதல் மலடி

ஒரு 
காதல்கூட
பெற முடியாத
காதல் மலடி
என் கவிதைகள்..!!

உனக்கெழுதிய
கவிதைகளை
இன்று
ஊரே
காதலிக்கிறது..!!

நீ கடைசியாய்
அழ வைத்து சென்ற
பூங்கா இருக்கையில்..
இன்று
வேறு காதலர்கள் சிரித்தபடி...?!

என் 
இரவுகளை 

நரகமாக்க
எங்கிருந்தோ....
எப்படியோ....
கண்ணில்பட வைத்துவிடுகிறாய்
பெண்ணொருத்தியை
உன் சாயலில்...!!

உனக்கு
சொர்க்கம்தான் சந்தேகமில்லை...
நரக த்தைதான்....
இங்கே கொடுத்து போயிருக்கிறாயே...??!

July 14, 2011

அழகுவதை சட்டம்
மிருகங்களை காப்பாற்ற..,
"மிருகவதை சட்டம்"
வந்தது போல...

உன் 
அழகிலிருந்து
என் 
நட்பை காப்பாற்ற.., 
"அழகுவதை சட்டம் "
ஒன்று வர வேண்டும்
தோழி...!!

July 8, 2011

காதலில்..நான் அனுமன் அல்ல...

வாழ்நாளெல்லாம்
காதலை
மௌனமாய் தூக்கி சுமக்க
நான் நத்தை அல்ல...!!

"நீதான் இருக்கிறாய்" என்று
நித்தமும்
நெஞ்சுகிழித்து கட்ட
நான் அனுமனும் அல்ல...!!

உனக்காக எழுதிய..
என் கவிதையை வைத்து
"காதல் ஜெயித்தவனின் குழந்தைக்கு
நாளை காதுகுத்தாம்...?!"

கொடுத்தனுப்பிய கடிதங்களை
என்ன செய்தாய் ..?

குளிர் காய்கிறாயா....
பனிகாலங்களில்..?

கப்பல் விடுகிறாயா...
மழைகாலங்களில்..?

அக்கா குழந்தையின் கழிவு துடைக்க
கொடுத்துவிட்டாயா..?

கனவுகளில் கசிந்துருகும்
உனக்கும்...
நேரில் நரகம் பரிசளிக்கும்
உனக்கும் ...
எத்தனை வேற்றுமைகள்..?!

June 30, 2011

கடவுளை சபிக்கும் வரம் வேண்டும்..

பெண்கள் விடுதியின்.... 
கிழட்டு காவல்காரனாய் செல்ல 
கடவுளை சபிக்கும் 
வரம் வேண்டும்..!!

அப்போதுதான் புரியும் 
அவனுக்கு 
அருகிலிருந்தும் "விதி" சொல்லி 
பிரித்த எத்தனையோ 
பிரியங்களின் வலி..?!

....

May 24, 2011

காதல் & காமம்

காதல் "செந்தாமரை..".
காமம் "சகதி குளம்.."
காதலுக்கு உரமாகும் 
காமம்...!!

காதல் வைரம்...
காமம் கரி..
கரி உருமாறி...
காதல் வைரமாகும்...!!

காதல் பலாச்சுளை...
காமம் முள்...
காமம் கடந்தால் 
காதல் சுளை ருசிக்கலாம்....!!
********************************************
குணபடுத்த முடியாத நோயின் வலியிலிருந்து தப்பிக்க 
"கருணை கொலை" அரசால் 
கொண்டு வரப்பட்டது..

உன் 
பிரிவின் வலியும் அப்பிடிதான்... 
நீயே என்னை 
"கருணை கொலையும்" செய்துவிடு
 தயவு செய்து...!!
ஏனெனில் 
நான் இறக்கும் முன் பார்த்த கடைசி முகம் 
உன் 
முகம்மாய்தான் இருக்கும்...!!


May 19, 2011

பழாப்பழ வாசனை" அது...


என் பிரியம் மொத்தமும் 
கொட்டி அனுப்பும் 
குறும்செய்திகள் கூட்டி வந்துவிடும் 
உன்னை ஒருநாள் 
என்னிடம்..
வந்து என் கையை பிடித்தபடி  
கொஞ்ச நேரம் 
அமர்ந்து விட்டு போ
"புண்ணியமாய்" போகட்டும் 
உனக்கு...!!
**************************************************
காதல்..., 
காணும்போதெல்லாம் 
காட்டுவதற்கு 
"கண்ணாடி" அல்ல அது...!
எப்போதும் கையிலெடுத்து 
கொஞ்ச சொல்லும் 
கைக்குழந்தை அது...!
ஒளித்து வைக்க முடியாத 
"பழாப்பழ  வாசனை" அது...!
"நேசித்தவளின்" பெயரை  
எங்காவது கேட்டால்...
இதழோரம் புன்னகையும்....
இமையோரம் சிறு துளியும் 
எட்டி பார்க்கும் 
விந்தையான வேதனை அது..!!

May 9, 2011

உன் "கைபேசி எண்" என்ன..?உன் மனக்கதவை திறக்கும்
குறும்செய்தி...
எந்த குறும்செய்தியோ..?

உன் வெட்கம் உடைக்கும்
ஸ்பரிசம்
எந்த ஸ்பரிசமோ..?
*************************************
இனி எப்போது அழைப்பாய்
இனிப்பே...?
உன் அழைப்பு வந்தால்
என்னோடு சேர்த்து......
என் கவிதைகளும் பிழைத்துக்கொள்ளும்..!!
***********************************
சிறு வயது கதையில்...
நாளெல்லாம் குதித்து ஓய்ந்து
நரி
இப்படி சொல்லி போனது...
"சீ..இந்த பழம் புளிக்கும் என்று...?!"
ஆனால் ஆயுள் முழுவதும் முயற்சித்தும்,
நீ காதல் மறுத்தாலும்..,
இப்படிதான் சொல்வேன்..
"ஆஹா..
இந்த பழம் எப்போதும்
இனிக்கும்..!!"என்று.
***********************************
உலக ஆண்கள் மனதில்
ஓடும் ஒரே ஒரு கேள்வி...
உன்
"கைபேசி எண்" என்ன..?
என்பதுதான்.

நீ எப்போதுமே
அழைக்க போவதில்லை..
இருந்தாலும் வாங்கிய
புது கைபேசியில் கூட
"நெட்வொர்க் குறை" இருக்குமோ..? என
சலன படுகிறது உன்னிடம்
சறுக்கிய மனசு..!!

March 23, 2011

அழகு திருத்தம்

என்
சின்ன சின்ன
பொய்கள் கூட
உன்
"பிரியம்" மொத்தமும்
வாங்கத்தான்...

உன்
சின்ன சின்ன
"அழகு திருத்தம்" கூட
வேலை நிறுத்தம் 

உண்டாக்குகிறது
உயிர் துடிப்பு
மொத்தத்தில்.......!!
*********************************************
உன்னழகில்
வழுக்கி விழும்
தாவணியை
சதா...சரி செய்வதுபோல்
என்னையும்
கொஞ்சம்
நெறிப்படுத்தேன்...?

March 4, 2011

கெட்ட கெட்ட கனவு...

"உறங்கும் முன் 
தெய்வத்தை நினைத்துவிட்டு படு....
கெட்ட கெட்ட கனவுகள் வராது..!!" 
என அம்மா 
எப்போதும் சொல்லுவாள்.

இப்போதெல்லாம் 
உறங்கும் முன் 
"தேவதை..." 
உன்னைத்தான் நினைத்து கொள்கிறேன்...
நீயும் சலிக்காமல் 
எனக்கு பிடித்தமாதிரி 
கெட்ட கெட்ட கனவுகளாய் 
கொடுக்கிறாய்..!!

February 24, 2011

ஒரு ஊரே காதலிக்க ஏங்குகிறது....


அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால் 
பேச தொடங்கினால் 
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!

அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால் 
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம் 
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!

அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால் 
எல்லா கவிதைக்கும் 
அவளை பிடிக்கும்..!!

அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால் 
ஒரு ஊரே 
அவள் காதலிக்க ஏங்குகிறது 
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை..., 
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு" 
எல்லாருக்கும்..!! 

February 23, 2011

நீதான் வேண்டும்" என் குறும்செய்திக்கு பதிலாக..

நீ 
அனுப்புவது 
என் 
குறும்செய்திக்கு 
"பதில்....?!"
  
எனக்கோ 
"நீதான் வேண்டும்" 
என் 
குறும்செய்திக்கு பதிலாக..!!
*****************************************
நீ 
திட்டி அனுப்பிய 
குறும்செய்திகளை கைபேசியில் 
பார்த்து...
"இதை ஏன் அழிக்கவில்லை..?" 
என்றாய்.

"தயவு செய்து அழித்துவிடாதே  
 என்மீது 
நீ எடுத்துகொள்ளும் 
அதீத உரிமையின் அடையாளம்தான் 
அது..!?" என்றதும்..
"போடா" என அழ தொடங்கினாய் 
புன்னகைத்தபடி..!! 
****************************************
பார்க்க வருவதற்குள்... 
"எங்கே இருக்கிறாய்..?
எங்கே இருக்கிறாய்..?
என 
நூறு முறை குறும்செய்தி 
அனுப்பி விடுவாய்...

நானோ 
பதிலே அனுப்பாமல் 
நேரில் வந்து காதில் கிசுகிசுப்பேன் 
"எப்போதும் 
உன் 
இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!" 
என கண்ணடித்து.


February 19, 2011

அழகுயர பூ......

நெரிசல் மிகுந்த சாலை
அவள் வீடு இருக்கும் 
தெரு...!!

நெரிசலில் 
"காதல் வாழ்த்து அட்டைகள்"
ஆண்கள் கண்ட ஒரே 
"அழகி" நீயோ..?

என் காதல் திறக்க 
நல்ல நேரம் பார்த்திருக்கும் 
என் நிலையோ...
நெருக்கடியில்....மிகுந்த 
நெருக்கடியில்...?!
******************************************
உனக்கு 
"பூ" வாங்க 
பூக்கடைக்கு சென்று விட்டேன் 
தெரியாத்தனமாக...
அதற்காக இப்படியா 
உன் 
"சாதிஜன பூக்களெல்லாம்" 
என்னை 
கிண்டல் செய்வது...?
'அழகுயர பூவிற்கு..,' 
'முழம் பூ...' 
வாங்க வந்துவிட்டான் 
கிறுக்கன்...!!" என..

January 4, 2011

புது டைரியாக" என்னை கொடுக்கிறேன்.....


"புது டைரியாக" 

என்னை கொடுக்கிறேன் 

உன்னிடம்...

கவிதை எழுது....
கணக்கு குறி..
முக்கிய நிகழ்வுகளை 
பதிவு செய்...

ஆனால் 
முடித்து மூடி மட்டும் விடாதே..!!
*************************

பெரும்பாலும் 
நான் அனுப்பும் குறும்செய்திகளுக்கு.. 
நீ பதிலே அனுப்புவது இல்லை...
ஆனால்
பதிலே அனுப்பாத உனக்குத்தான் 
பெரும்பாலும் 
நான் அதிகம் குறும்செய்தி 
அனுப்பி வருகிறேன் 
பிரியமாய்...?!!
*************************
குளித்த தலைமுடியின் ஈரம், 
நடைபோடும் 
உன் பின்புறத்தில் 'புள்ளி வைக்கிறது'...

இதை 
கண்கொட்டாமல் பார்த்திருக்கும் 
காளையர் நெஞ்செல்லாம் கோலம் போடுகிறது...!