October 3, 2009

என் 'காதல் கடிதங்களை....'


பெய்த மழையில் 
கால்பங்கு மட்டுமே 


கடலில் கலப்பது போல....
எழுதிய ஆயிரம் 'காதல் கடிதத்தில்'


என்னவள்..
உனக்கு கொடுத்தவை
'ஒன்று' மட்டுமே....?!



மழை நின்ற பிறகு
இலை வழியே
ஒவ்வொன்றாய் வழியும் துளிகளின்
அழகான
ஓசை போல ...
உன்னை கைபிடித்த பின்
கட்டிலுக்கு அடியில் இருக்கும்...
என் 'காதல் கடிதங்களை'
ஒவ்வொன்றாய் மெதுவாய்
படித்து காட்டுவேன்..!!


POEM:
From the lakhs and lakhs of Rain drops only
few drops going to meet ocean...
From my thosands of Letters...
i handled u only one of it...!

One day comes...
when i read and show u all my letters
written to give u..
which where now sleeping down my
wooden show case...!



அம்மா ...

அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..
உயிரை
வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....


அம்மா.....
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'


உன்
அன்பின் கதகதப்பும்,
வலிக்காத தண்டனைகளும்..,
இனி
யாராலும் தர முடியாது..


கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா"
என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??


நீ
இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..
ஆனால் இன்னமும்
என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...


அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!

October 2, 2009

சக்கரை சுமக்கும் சிற்றெறும்பு..

நீ 
நேரில் வர வேண்டாம்..!
நெஞ்சுருக...
நேசம் கூட 

தர வேண்டாம்....!
ஒரே ஒரு வார்த்தை உதிர்ப்பாயா..
என் உயிர் 

சுகப்படும்...?
சொல்வாயா..... 

"நேசிக்கிறேன்" என்று மட்டும் ??


அது போதும் எனக்கு...


'சக்கரை சுமக்கும் சிற்றெறும்பு' போல
சந்தோசமாய்
உன் பெயரை ஆளில்லாத

உயர்ந்த மலையில் 
உரக்க சொல்லி
உயிர் முடிப்பேன்...

நன்றியோடு..?

உன் தாவணியே கட்சி கொடியாகட்டும்..



என் செல்ல சிணுங்கியே...

நீ
ஒரு கட்சி தொடங்கு..,

உன்
தாவணியே கட்சி கொடியாகட்டும்..!?

இன்றைய வாலிபர்கள்...,
முன்னாள் வாலிபர்கள்...,
வருங்கால வாலிபர்கள்...,
இப்படி
எல்லாருடைய ஓட்டும்
உனக்குத்தான் விழும்..!!

ஆனால் நான்தான்..
கட்சியின்
கொள்கை பரப்பு செயலாளர்...

சரியா..??

அழகி.. நீ கடித்த பழத்தை...



அணில்
கடித்த பழம்...
அது
மிக
இனிப்பாக இருக்குமாம்..!!

அழகி..

நீ
கடித்த பழத்தை...
அணிலே...
கெஞ்சி
கேட்டு கொண்டு நிற்கும்...!??