November 29, 2009

கோவைப்பழம்


உலகத்தை சுற்றினால் 
"ஞானப்பழம்" 
கொடுப்பதாய் சொன்னார் 
பரமேஸ்வரன்...?!
உன்னையே உலகமென்று 
பலவருடமாய் சுற்றும் எனக்கு 
ஒரு சின்ன
 "கோவைபழமாவது" 
கொடுப்பாயா..? 
"கோவைப்பழம்" எங்கே என்று 
தேட வேண்டாம்..
உன் 
இதழ்களைத்தான் 
அப்படி சொன்னேன்..!?

November 23, 2009

நம் குழந்தை...

பூங்காவில் விளையாடும்..,
ஒரு 
குழந்தையை பார்த்தும்
என் பக்கம் திரும்பி கேட்டாய்...
'நம் குழந்தை...
உங்களை போல் வேண்டுமா?
இல்லை
என்னை போல் வேண்டுமா?
என்று..
நான் புன்னகைத்தபடி சொன்னேன்...
அழகி..
'நம் குழந்தை..
நம் காதல் போல் 
அழகாய் இருக்கட்டும்' என்று..!


பிடிவாதக்காரி..!நீ 
எனக்கு 
மிகவும்  பிடித்த...
குறும்புக்கார 
பிடிவாதக்காரி..!?

என் கவிதை..நீ படிக்காத 
என் கவிதை...
என்ன கவிதை..?!


என் கவிதைக்கு
எது விதை.?-உன் 
எண்ணமே  விதை..?!

November 20, 2009

தனித்துவமானவளே....நீ 


தனித்துவம் வாய்ந்தவள்..!

மன்னிக்கவும்.., எதோடும் 

ஒப்பிட முடியாது என்னால்..!

எனக்குள்ளே 

பட்டிமன்றம் நடக்கிறது..

நீ அழகா..?

இல்லை

உன் கையெழுத்து 

அழகா..?

என்று

என்ன 
ஒரு வேதனை...?
ஒரு உயிர்...
இரண்டு உடல்களில் 
பிரிந்து 
கிடக்கிறதே..?!


உன் பார்வை....

என் மொத்தத்தின் 

நங்கூரம்..?!

கனவு....'கனவு' ஒரு 
வரம்...
நனவில் இல்லாததை 
தரும்...!

கனவு... 
ஆசைகளின் பிரதிபலிப்பு...
'கனவு' 
பெருமூச்சுகளின் பரிசளிப்பு..!?

தளர்ந்த காலத்திலும்
குறையா 
திரைப்பட கொட்டகை...!
வளரும் காலத்தில் 
வளமான 
பொன்னால் தொட்ட கை..!!

November 17, 2009

பால்கோவா பெண்ணே..!என்
செல்ல 

பால்கோவா பெண்ணே..!
உன்
ஒவ்வொரு 

கண்ணீரும் விழுகையில்....

என்
ஒவ்வொரு 

ஆயுளும் குறைகிறது...?
அதனால்
தயவு செய்து..

இனி 
எப்போதும் அழாதே..!

பிரம்மனின் செல்ல படைப்பே,,.
கருப்பு வெள்ளை
புகைப்படத்தில்கூட...
உன் 
ஒருத்தியால் 
மட்டும்தான் 
அழகாக 
தெரிய  முடியும்..!!
******************************
எந்த நவீன 
புகைப்பட சாதனம் 
கொண்டும் 
உன் அழகை 
சரியாக படம்பிடிக்க முடியாது..!!
****************************************

என் அழகு காய்ச்சலே...காற்றைக்கூட 
சுகிக்க தெரியாதவனை 
"கவிதை' எழுத செய்தாய் 
சிறு கண்ணசைவில்..!!


தூக்கத்தில் 
பொழுது போக்கியவனை..
'நட்சத்திரங்களை' 
எண்ண வைத்தாய்..!!


சொர்கத்தின் விலாசத்தை 
விசாரித்து திரிந்தவனை...
"ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" 
என 
சொல்லாமல் உணர்த்தினாய்..!!


தோல்விகளில் 
தடுக்கி விழுந்த என்னை 
வெற்றிகளோடு 
கைகுலுக்க செய்தாய்..!!


நன்றி 
என் இனிய மோகினியே..!!


November 14, 2009

"பேரழகிகள்"
'அழகிகள்'எல்லாம் 


மனதை தொடுவதில்லை

ஆனால் மனதை தொடுபவர்கள் 


எல்லாம் 

"பேரழகிகள்" ஆகி விடுகிறார்கள்..


உன்னை போலவே..!!

கோபம் வராதா...காதலா?

என்மீது உங்களுக்கு

எப்போதும் கோபமே வராதா..?
என்று
ஒரு நாள் திடீரென்று கேட்டாய்..


நான் புன்னைகைத்தபடியே
சொன்னேன்"வரும்..

கொள்ளை கோபம் வரும்..
ஒருவேளை
நீ 

என் அன்பெல்லாம்
மறந்து விலகி போனால்...

வரலாம்..?!
ஆனால் அப்போதும் 

உன்மீதான கோபத்தை..
என்மேல்தான் காட்டிக்கொள்வேனேதவிர..
என் உயிர்மழை
உன்மீது அல்ல...என்றதும்
கண்ணீரோடு சாய்ந்துகொண்டாய்
உனக்கான 

என் தோள்களில்...

November 3, 2009இன்றும் எடுத்து விட்டேன்
இரண்டு பயண சீட்டு பேருந்தில்...
நீ என்னுடன் இல்லை என்று
ஏற்றுகொள்ளவே முடிவதில்லை 

இந்த பாழ் மனசால்..!! 

அழகான தொந்தரவு....

நீ ஒரு அழகான தொந்தரவு...

ஆனால் அடிக்கடி தொந்தரவு செய்யாதே...


தயவு செய்து 

எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இரு...!

உன் செல்போன்..இப்படி  
எந்நேரமும் பக்கத்திலேயே வைத்திருப்பாய்  
என்று தெரிந்திருந்தால்.... 
உன் செல்போனாக பிறந்திருப்பேன்...  
இப்படி  
இதயத்தோடு பிறந்து என்ன பயன்?