எப்போதும்
என் குறுஞ்செய்திகளின் குலதெய்வம்
நீதானடி..
அனுப்பிய அனைத்தும் ஒன்றுகூடி
உனக்காக "தேர்" இழுத்தாலும்
ஆச்சர்யமில்லை..!!
********************************************
"இனிய இரவு" என்று தினமும்
குறும்செய்தி அனுப்புகிறாய் அப்பாவி போல...
இனியவள் நீயில்லாத
இரவு எப்படி
"இனிய இரவாக" முடியும்..?
*******************************************
ரகசியம் இதுதான்...
என் கைபேசிக்கு
எஸ்.எம்.எஸ் பூஸ்டர்....
என் கைபேசியில் இருக்கும்
உன் புகைப்படம் மட்டுமே
என் பூஸ்டர்...!!
******************************************
நீ...
என் கைபேசி
எண்ணைகூட அழித்து விட்டாய்...!!
உன் "போடா" என்ற
ஒரு வார்த்தை "எஸ்.எம்.எஸ்"கூட
அப்படியே இருக்கிறது
கைபேசியை அழகாக்கி...
கண்ணில் ஈரமாக்கி...!!
*******************************************
அழகி...
நீயும் என் காதலுக்கு
சைலன்ட் மோடு...!!
அதிரும்...
உன் கைபேசியும்
என் குறுஞ்செய்திக்கு
சைலன்ட் மோடு..!!
******************************************
உங்களின் கவிதைகளில் நானும் விழுந்து விட்டேன்... ஒரு வித கவிதைக்காதலுடன்.
ReplyDeleteஎன் குறுஞ்செய்திகளின் குலதெய்வம்
ReplyDeleteஅட.. அட.. என்ன ஒரு வார்த்தை வடிவமைப்பு..
சபாஷ்.
நீ...
ReplyDeleteஎன் கைபேசி
எண்ணைகூட அழித்து விட்டாய்...!!
உன் "போடா" என்ற
ஒரு வார்த்தை "எஸ்.எம்.எஸ்"கூட
அப்படியே இருக்கிறது
கைபேசியை அழகாக்கி...
கண்ணில் ஈரமாக்கி...!!
****************************************
May be true.....