January 22, 2010

கூன் விழாத காதல்....தலை நரைத்தாலும்
எப்போதும் 
என் கவிதை
தலைவி நீதான்.......

உடல்
கூன் விழுந்தாலும் 
எப்போதும்
கூன் விழாது 
என் காதல்..!!

கருணையே இல்லாமல் 
உயிர் தின்றாலும்..
உன்
கருவிழிகள் 
என்றால் எனக்கு உயிர்...!

சைவம்....அசைவம்.
திரைப்படம் 
தொடங்கியது...


"என் கைகளை 
பிடித்துக்கொள்
நான் சைவம்...
அவை அசைவம்..
அதனால்...?!


சிரித்தபடியே 
கொடுத்த கைகளை 
பிடிக்கவில்லை...நீ.?


உன் 
சுதந்திரம் 
என்னை 
சுத்தமாகியது..?! 


சுத்தமான 'கைக்கு' 
படம் முடிந்ததும் 
சுறுசுறுப்பாய் கொடுத்தாய் 
'முத்தம்' ஒன்று  எதிர்பாராமல்..?!


January 12, 2010

முத்தங்கள்நான் முத்தங்களுக்காக 

ஏங்குபவன் அல்ல..?!
இருந்தாலும்நீ
உன் எதிர்வீட்டு குழந்தையை 

கொஞ்சி 
முத்தமிடும் போதெல்லாம்...

நானும் 


அந்த குழந்தையாக....!?

பிரம்மனின் செல்ல படைப்பே,

பிரம்மனின் செல்ல படைப்பே,,,
புது டைரியாக 

என்னை கொடுக்கிறேன்
உன்னிடம்...


கவிதை எழுதிகொள்...
கதை எழுதிகொள்...
கருத்து பதிவு செய்...
ஓவியம் வரைந்துகொள்...


ஆனால்
முடித்து மூடி 
மட்டும் விடாதே..!!

வழுக்கி விழும் வெட்க குடமே..!!வழக்கமாக என்னை பார்த்தாலே
வழுக்கி விழும் வெட்க குடமே..!!வழக்கமா நீ வரும் வழியில் வராததால்..,வழக்கமாக உனக்கு இலவசமாக 
பூ கொடுக்கும் பூக்கார கிழவிக்கு 
வாடிக்கையாளர்கள் 
குறைந்து போனார்களாம்.....!!

வழக்கமாக வாலிபர்கள் கூடும் 

பஞ்சர் ஓட்டும் பாய் கடை
வெறிச்சோடி கிடக்கிறதாம்..!!


வழக்கமாக நீ "குட் ஈவ்னிங்" சொல்லும் 

பெட்டிகடை கிழவன் 
வாட்டமாய் இருக்கிறானாம்..!!

நீ சொல்லவில்லையா....இவர்களிடம்

என் 
பிறந்த நாள் கொண்டாட்டத்தில்
கலந்ததால் நேரமாகி குறுக்கு பாதையில்
உன் வீட்டு   பின் வாசல் வழியே

உள்ளே  புகுந்ததை ..??

January 11, 2010

நீ சொல்....
"நீ
என்னை 

நேசிக்கிறாய்" 
என்று சொல்வதை விட..

"நீ
என்னை 

பிரியமாட்டாய்" 
என்று சொல்வதைத்தான்
நான் 

அதிகம் விரும்புகிறேன்..?!

எதிர்பாராத முத்தம்


முத்தங்களில்.. 
காதல் சொல்வதில் 
உனக்கு நிகர் 
நீதான்...


எதிர்பாராத நேரத்தில் 
அழுத்தமாய் 
பல திருப்பங்களை 
கொடுத்து 
அழகாக்குகிறாய் 
'வாழ்க்கையை' போல..?!

அழகு சித்ரவதை

ஒரு முறை
உன் வீட்டு 

ஆளுயர கண்ணாடியில்...
நீ உடை மாற்றும் போது...
நீயே உன்னை பார்...?


பிறகு புரியும் 

உனக்கும்,

உன் அழகுகள் 

எல்லாம் எப்படி 
செய்கிறது 
என்னை  என்று..!

உன் கை பிடிக்கத்தான்....


ஏதாவது சொல்லி
உன் கை 

பிடிக்கத்தான்...

நான்

"கைரேகை சாஸ்திரமே"
தெரிந்து கொண்டேன்....!

தேன்கூடு.....

நீ 'சக்கரைகட்டி'  என 
நினைத்து 
கரைக்க முயன்று...,

நேற்றெல்லாம் 

பெய்த மழை
கடைசியில் 

ஒப்புக்கொண்டது...

நீ சக்கரைகட்டி அல்ல...
'தேன்கூடு'...என்று..?!

சாதுக்கள்' அல்ல..!?!


இரவு உடையில்...
இருக்கும்போது 


தயவுசெய்து 

நான் அனுப்பும் கவிதைகளை....

படிக்கும் விஷ பரீட்சையில் 
இறங்கி விடாதே...

என்னைபோல்...என் கவிதைகள்
'சாதுக்கள்' அல்ல..!?! 

கெட்ட பழக்கம்..உன்னை 
பார்த்ததில் இருந்து
எனக்கொரு 

கெட்ட பழக்கம்...

நகம் கடிக்க 

தொடங்கி இருக்கிறேன்
பேரழகியே..?!!

கிள்ளல்.....


கிள்ளல்களில் வெட்கத்தை
கொட்ட
உன்னால் மட்டும்தான் முடியும்
என் செல்ல அழகு அல்லி..!!

விழி சுழற்றி காட்டியதற்கே
அழிந்தது என் ஆசை அத்தனையும்...
முழு காமம் காட்டும் போது
முகத்தை எங்கே வைப்பேனோ?

நீ பெருமூச்சு விடும் போது
உன் பேரழகுகளை..
ஓரக்கண்ணால் ரசித்ததற்கு
நக கிள்ளல்களை பதிவு செய்தாய்...


பின் உன் நக பதிவுகளை
பார்க்கும் போதெல்லாம்-எனக்கு
'உன்
பெருமூச்சு அழகுகளின்' ஞாபகமே..!

January 4, 2010

செயல் வீரன்....

உன் கவிதையை விட
உன்னைத்தான் அதிகம் விரும்புகிறேன்..?!


வாய் சொல் வீரனை விட..


செயல் வீரன் தான் அதிகம்
எனக்கு பிடிக்கும்...?!

உன் புது வண்டி.....


முன்னால் நீ இருக்க...
உன் புது வண்டியின்
பின்னால்
இந்த 

வெட்க கிறுக்கியால்
எப்படி உட்கார முடியும்..?

மருதாணி....

உன் விரல்"ஸ்பரிசம்" 
பட்டதற்கே
இப்படி சிவந்து விட்டதே
மருதாணி...?ம்ம்ம்.. 

 இனி நான்..?

January 3, 2010

உன்னை தவிர...!நீ பயணிக்கும் 
அந்த பேருந்தில் அனைவரும்
புரிந்து கொண்டார்கள்...,

என் காதலை..
உன்னை தவிர...!

January 2, 2010

அதிகமானது...


உன் பரிட்சைக்கு
நீ படித்ததைவிட...
நான்
உனக்காக பிரார்த்தனை
செய்ததே அதிகம்..!!