May 24, 2011

காதல் & காமம்

காதல் "செந்தாமரை..".
காமம் "சகதி குளம்.."
காதலுக்கு உரமாகும் 
காமம்...!!

காதல் வைரம்...
காமம் கரி..
கரி உருமாறி...
காதல் வைரமாகும்...!!

காதல் பலாச்சுளை...
காமம் முள்...
காமம் கடந்தால் 
காதல் சுளை ருசிக்கலாம்....!!
********************************************
குணபடுத்த முடியாத நோயின் வலியிலிருந்து தப்பிக்க 
"கருணை கொலை" அரசால் 
கொண்டு வரப்பட்டது..

உன் 
பிரிவின் வலியும் அப்பிடிதான்... 
நீயே என்னை 
"கருணை கொலையும்" செய்துவிடு
 தயவு செய்து...!!
ஏனெனில் 
நான் இறக்கும் முன் பார்த்த கடைசி முகம் 
உன் 
முகம்மாய்தான் இருக்கும்...!!


May 19, 2011

பழாப்பழ வாசனை" அது...


என் பிரியம் மொத்தமும் 
கொட்டி அனுப்பும் 
குறும்செய்திகள் கூட்டி வந்துவிடும் 
உன்னை ஒருநாள் 
என்னிடம்..
வந்து என் கையை பிடித்தபடி  
கொஞ்ச நேரம் 
அமர்ந்து விட்டு போ
"புண்ணியமாய்" போகட்டும் 
உனக்கு...!!
**************************************************
காதல்..., 
காணும்போதெல்லாம் 
காட்டுவதற்கு 
"கண்ணாடி" அல்ல அது...!
எப்போதும் கையிலெடுத்து 
கொஞ்ச சொல்லும் 
கைக்குழந்தை அது...!
ஒளித்து வைக்க முடியாத 
"பழாப்பழ  வாசனை" அது...!
"நேசித்தவளின்" பெயரை  
எங்காவது கேட்டால்...
இதழோரம் புன்னகையும்....
இமையோரம் சிறு துளியும் 
எட்டி பார்க்கும் 
விந்தையான வேதனை அது..!!

May 9, 2011

உன் "கைபேசி எண்" என்ன..?



உன் மனக்கதவை திறக்கும்
குறும்செய்தி...
எந்த குறும்செய்தியோ..?

உன் வெட்கம் உடைக்கும்
ஸ்பரிசம்
எந்த ஸ்பரிசமோ..?
*************************************
இனி எப்போது அழைப்பாய்
இனிப்பே...?
உன் அழைப்பு வந்தால்
என்னோடு சேர்த்து......
என் கவிதைகளும் பிழைத்துக்கொள்ளும்..!!
***********************************
சிறு வயது கதையில்...
நாளெல்லாம் குதித்து ஓய்ந்து
நரி
இப்படி சொல்லி போனது...
"சீ..இந்த பழம் புளிக்கும் என்று...?!"
ஆனால் ஆயுள் முழுவதும் முயற்சித்தும்,
நீ காதல் மறுத்தாலும்..,
இப்படிதான் சொல்வேன்..
"ஆஹா..
இந்த பழம் எப்போதும்
இனிக்கும்..!!"என்று.
***********************************
உலக ஆண்கள் மனதில்
ஓடும் ஒரே ஒரு கேள்வி...
உன்
"கைபேசி எண்" என்ன..?
என்பதுதான்.

நீ எப்போதுமே
அழைக்க போவதில்லை..
இருந்தாலும் வாங்கிய
புது கைபேசியில் கூட
"நெட்வொர்க் குறை" இருக்குமோ..? என
சலன படுகிறது உன்னிடம்
சறுக்கிய மனசு..!!