May 19, 2011

பழாப்பழ வாசனை" அது...


என் பிரியம் மொத்தமும் 
கொட்டி அனுப்பும் 
குறும்செய்திகள் கூட்டி வந்துவிடும் 
உன்னை ஒருநாள் 
என்னிடம்..
வந்து என் கையை பிடித்தபடி  
கொஞ்ச நேரம் 
அமர்ந்து விட்டு போ
"புண்ணியமாய்" போகட்டும் 
உனக்கு...!!
**************************************************
காதல்..., 
காணும்போதெல்லாம் 
காட்டுவதற்கு 
"கண்ணாடி" அல்ல அது...!
எப்போதும் கையிலெடுத்து 
கொஞ்ச சொல்லும் 
கைக்குழந்தை அது...!
ஒளித்து வைக்க முடியாத 
"பழாப்பழ  வாசனை" அது...!
"நேசித்தவளின்" பெயரை  
எங்காவது கேட்டால்...
இதழோரம் புன்னகையும்....
இமையோரம் சிறு துளியும் 
எட்டி பார்க்கும் 
விந்தையான வேதனை அது..!!

3 comments:

  1. பலாப்பழ //மாற்றி விடுங்கள் பழத்தின்
    ருசி குறைகிறது

    ReplyDelete
  2. மன்னிக்கவும்..."பழாப்பழ வாசனை" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன் தோழி...
    "பழாப்பழ ருசி" என்று அல்ல...!!

    ReplyDelete
  3. "நேசித்தவளின்" பெயரை
    எங்காவது கேட்டால்...
    இதழோரம் புன்னகையும்....
    இமையோரம் சிறு துளியும்
    எட்டி பார்க்கும்
    விந்தையான வேதனை அது..!!

    Touching!!

    ~ Sarumathy ~

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...