உன்னை பற்றி
பேசிகொண்டே இருக்கும்
என் வாயாடி மனம்...
**********************************
கஞ்சத்தனத்துக்கு இன்னொரு பெயர்
நீ..
கைபேசியில் பேசும்
ஓரிரு நிமிடங்களை போலத்தான்...
கனவிலும் வந்துவிட்டு
ஓடி போகிறாய்..!!
*************************************
கடவுள் எத்தனை கருணையானவர்...?
உனக்கு இத்தனை
அழகுகளை
அள்ளி தந்திருக்கிறார்..!!
நீயும்கூட
ஓர் தேவதைதானே தானே..?
எனக்கு
காதலை அள்ளி தராவிட்டாலும்...
கொஞ்சூண்டு கொடுக்கலாமே
நீ..!!
*************************************
என் கவிதைகளை படிக்கும்
நண்பர்கள்,
உன்னை பற்றி விசாரிக்கிறார்கள்...
உன் சம்மதத்திற்காக காத்திருக்கும்
என்னைபோல
அவர்களையும் காத்திருக்க
சொல்லி விட்டேன்..!!
Wow...
ReplyDeleteSuper Sir.....
சூப்பரா இருக்கு
ReplyDeletenice..
ReplyDeleteNandri nanbarkale....
ReplyDeleteSuper Sir
ReplyDelete