February 4, 2010

காதலும் குறுஞ்செய்தியும்....


உன் கைபேசி முழுவதும்
நிரம்பி வழியும்
என் குறுஞ்செய்தி போல....
என் நினைவு முழுவதும்
நீதானடி
நிரம்பி வழிகிறாய்...?!
**********************************
உனக்கு தினமும்
நான் நூறு குறுஞ்செய்தி அனுப்புவது
ஒரு சாதனையே அல்ல...
ஆனால் அதில் நீ ஒன்றுக்கு கூட
பதில் அனுப்பாமல்
மௌனம் சாதிப்பாயே...
அதுதான் பெரிய சாதனை..?!
****************************************
நானோ...
உனக்கு குறுஞ்செய்தி அனுப்பும்
இடைவெளியில்
கொஞ்சம் வேலை செய்வேன்..
நீயோ...
உன் வேலைகளுக்கு இடையே
என் குறுஞ்செய்திகளை படித்துகூட
பார்க்காமல் மொத்தமாய்
அழிப்பாய்..?!
******************************************
ஒரு "குறுஞ்செய்தி" வராதா..?
ஒரு "மிஸ்டு கால்" வராதா...?
மறந்து ஒரு "அழைப்பேனும்" வராதா..?
என்று "டிரை பாட்டரி" போல
உயிர் நொந்து
உன்னை தொடர்பு கொண்டால்...
இப்படி சொல்லும்....
"நீங்கள்
தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்கு
வெளியே உள்ளார்..?"
என்று.
************************************************
தினம்
உன் ரோஜா வளர்க்க
நீர் ஊற்றுவாய் மறக்காமல்...?!
தினம்
என் உயிர் வளர
ஒரு "குறுஞ்செய்தி" அனுப்புவாயா தோழி
மறக்காமல்..?
*************************************************
இப்படி
எந்நேரமும் உன்னுடனே வைத்திருப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன் கைபேசியாக பிறந்திருப்பேன்...,
இதயத்தோடு பிறந்து
என்ன பயன்..?

4 comments:

  1. உனக்கு குறுஞ்செய்தி அனுப்பும்
    இடைவெளியில்
    கொஞ்சம் வேலை செய்வேன்..

    உங்க ஆபிஸ் அட்ரஸ் பிளீஸ்!!!!

    ReplyDelete
  2. unkal kai pesukirathu kavithai vadivil. kai pesi yil ivvalavu visayam ullathai ungkal kavithai arumaiyaai unarththukirathu. arumai .

    ReplyDelete
  3. Nandri Rishaban,sivaji and Madurai saravanan...

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...