நீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை..?! நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..?!
February 19, 2010
கைகுலுக்கும் தோழி...
காதலியை பார்க்க போகும் முன்
கைபிடித்து நகம் வெட்டிவிட்டு
புன்முறுவல் செய்வாள்
தோழி...?!
**********************************
தோழி...
தங்கைக்கும்...
காதலிக்கும்...
இடைப்பட்டவள்...!!
தோழி...
நெருக்கத்துக்கும்..
தூரத்துக்கும்..
இடைப்பட்டவள்...?!
**********************************
தோழியை கண்டதும்...
நெருக்கமாய் அமர்வாள் காதலி...!?
காதலியை கண்டதும்....
புன்னகைத்து விலகி நடப்பாள் தோழி..!
**********************************
பிறந்தநாள் வாழ்த்து...
தொலைபேசியில் சொல்வாள் காதலி..!
கை குலுக்கி சொல்வாள்
என் அம்மாவோடு சேர்ந்து தோழி..?!
**********************************
என் காதலுக்காக அவள் வாதிடுவாள்
என் சாதியோடு...?!
அவள் காதலுக்காக நான் வாதிடுவேன்
அவள் அப்பாவோடு..?!
**********************************
வெளியூர் வேலைக்கு செல்லும்போது..
அம்மா...
சோறு கொடுத்து அனுப்புவாள்...
அப்பா..
செலவுக்கு கொடுத்து அனுப்புவார்...
காதலி..
முத்தம் கொடுத்து அனுப்புவாள்..
தோழிதான்...
நம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்..?!
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாருக்கு
ReplyDeleteNandri nanbarae..?!
ReplyDelete//தோழியை கண்டதும்...
ReplyDeleteநெருக்கமாய் அமர்வாள் காதலி...!?
காதலியை கண்டதும்....
புன்னகைத்து விலகி நடப்பாள் தோழி..!//
சரிதான்...!
அற்புதமாக சிந்தனை. ஒவ்வொருவருக்கும் தோழி /ழ்ன் என்ற ஒருவள்/ன் வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பி விட்ட கவிதை
ReplyDeleteதோழி...
ReplyDeleteதங்கைக்கும்...
காதலிக்கும்...
இடைப்பட்டவள்...!!
தோழி...
நெருக்கத்துக்கும்..
தூரத்துக்கும்..
இடைப்பட்டவள்...?! மிக மிக அருமை நண்பா ....
வெளியூர் வேலைக்கு செல்லும்போது..
ReplyDeleteஅம்மா...
சோறு கொடுத்து அனுப்புவாள்...
அப்பா..
செலவுக்கு கொடுத்து அனுப்புவார்...
காதலி..
முத்தம் கொடுத்து அனுப்புவாள்..
தோழிதான்...
நம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்..?!
"Good lines"
தோழிதான்...
ReplyDeleteநம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்..?!
sooperb lines