December 26, 2010

முதல் முதலா லவ் லெட்டர் கொடுத்தது...



வாழ்க்கை என்னும் "ரோடு ரோலர்" எல்லாவற்றையும் நசுக்கிய போதும்...சில அழகான தருணங்கள், சில நகைச்சுவை சம்பவங்கள் , பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள், நம்மை கடந்த தேவதைகள், (பில்ட் அப்) அட்டுகளையும் தேவதைகளாக வர்ணித்த கவிதைகள்..,நண்பர்கள் காதலுக்காக "லோல்" பட்டது...இப்படி மறக்க முடியாத சிறு சந்தோசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

"வாத்தியார் தவறான பதிலுக்கு மறந்து முழு மதிப்பெண் போட்ட போது கிடைத்த சந்தோசம்" போல் இந்த சந்தோஷ நினைவுகளும் நம் இதய துடிப்பை அதிகரிக்கத்தான் செய்கின்றன...நிற்க
.
நான் +2 படிக்கும்போது என் நண்பனின் காதலுக்காக செய்த "அலப்பரை தான்" இந்த பதிவு. நான் கவிதை என்று கிறுக்க தொடங்கி 3 வருடங்கள் ஆன தருணம் அது. அப்போது "பிரசன்னா" என்ற என் நண்பன் தினமும் வரும் பேருந்தில் "சுஜினி" என்ற பெண்ணை கண் பார்த்து காதல் வளர்த்து வந்தான்.எத்தனை நாள்தான் இப்படியே கண்ணை மட்டும் பார்க்கிறது..? அதனால ஒரு லவ் லெட்டர் கொடுத்து காதலை வெளிப்படுத்த நினைத்தான். 

வகுப்புக்கு வந்ததும் சக நண்பர்களிடம் ஆலோசனை கேட்க்க நான் முந்திரிகொட்டை போல "மாப்ள நீ லவ் லெட்டர் கவிதையா எழுதி கொடு..அப்பத்தான் இம்ப்ரெஸ் ஆவாள்..என்று ஐடியா கொடுத்தேன். 
அவன் கவிதை எழுத வராது என்றதும்..நானே அவளை பற்றிய சில குறிப்புகளை கேட்டு அதை வைத்து ஒரு கடிதமும் எழுதியும் கொடுத்தேன்...கடிதம் இதுதான்..

"என் செல்ல பட்டாம்பூச்சிக்கு...
ஆம்..
என் நண்பர்களிடம் உன் பெயரை 
அப்படித்தான் செல்லமாக சொல்லி வைத்திருக்கிறேன்..
ஏன் தெரியுமா?
உன் கண்கள் என்னை பார்த்ததும்.., 
"பட்டாம்பூச்சியின் சிறகை"போல் அடித்துகொள்ளுமே 
அதனால்..!!
நீ நலமா...? நான் இங்கே சுகமாய் இல்லை...
தினமும் இரக்கமே இல்லாமல் 
என் ஆசிரியர் கொடுக்கும் எழுத்து சுமைகளை விட... 
சொல்லாமல் வைத்திருக்கும் "உன்மேலான என் பிரியம்" 
வளர்ந்து வளர்ந்து பெரும் சுமையாக சேர்ந்து 
என்னை அமுக்குகிறது...!! 
உன் தோழி "பசி" என்றதும்.. 
உன் மொத்த மதிய உணவையும் கொடுக்கும் 
இரக்க குணம் உனக்கு என கேள்விப்பட்டுதான் 
இந்த கடிதத்தை எழுத தைரியம் வந்தது எனக்கு..
தோழிக்கு இத்தனை செய்த நீ 
உன் தோள் சாயும் சின்ன சந்தோசத்தை மட்டும் தருவாயா எனக்கு..? 
-உன்னை பற்றிய கனவுகள் மட்டும் காணும்  
ஒரு இதயம் (13A BUS)"

கடிதம் ரெடி...யார் கொடுப்பது..? பிரசன்னவுக்கோ அவளை பார்த்தாலே "பிரசவம்" கண்டு விடுகிறதாம். அப்போதுதான் வெள்ளிங்கிரி என்னை கை காட்டி "டேய் சதீஷ் கொடுத்திடுவான்..அவன்தான் காமெடியா பேசி கொடுக்க சரியான ஆள்..?!" என்று என்னை மாட்டிவிட்டான். அவனுக்கு என்னை இப்படி மாட்டி விடுவதில் ஒரு குரூர ஆசை. நான் முடியவே முடியாது என்று "கசாயம் குடித்தும்" பலனில்லாமல் போனது...இதுக்கு பேருதான் "எங்கோ போறத எடுத்து...எதுகுள்ளோ விடுவது" என்று சொல்வார்கள். 

எல்லா நண்பர்களும் ஒன்று சேர்ந்து நண்பேண்டா என்றதும்...வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டேன்...
இனிதான் சனியே....ஆரம்பம்...

தொடரும்....    

2 comments:

  1. Very interesting....!
    This poem is really really awesome....:-)
    mothathulla ungala Sathish courier service ah aakitanga pola...!?

    ReplyDelete
  2. முதல் முதலா லவ் லெட்டர் கொடுத்தது...
    காலத்தையும் தாண்டி நிற்கும் நட்பின் அற்புத நினைவுகள்...
    வாழ்த்துக்கள் நண்பா....

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...