December 30, 2009

ஒரு காதல் பொழுது...

அவள் விரலுக்கு  சொடுக்கு 

எடுக்கும் போது 

இப்படி கேட்டாள்..

உங்களுக்கு...
"காதல்..,முத்தம்..,அழகு..,
கவிதை..,ஜோக்ஸ்...,
இதைதவிர வேறு எதுவும்
பேச தெரியாதா..?"என்று.

சொடுக்குவதை நிறுத்தி
"வேறு என்ன பேச உலகத்தில்
காதலை விட அழகாய் இருக்கிறது...
சரி நீ சொல்.. 

நான் அதை பற்றி பேசுகிறேன் என்றேன்..?!

ம்ம்ம்...ஒரு மாறுதலுக்காக 

"உலக  அரசியல்" பற்றி பேசுங்கள் என்றாள். 

அப்படியா..சரி
"அமெரிக்க அதிபர்  ஒரு நாளில்.. 

அவர் மனைவியை 
எத்தனை முறை முத்தமிடுவார்..?
என்றேன் கண்சிமிட்டி..

அய்யோ..கடவுளே..?! என்று
என் தலையை குட்டிகொண்டே இருந்தாள்
பிரிய காதலில்....

8 comments:

  1. :)) நகத்திற்கு சொடுக்கு ? :))

    ReplyDelete
  2. அடேடே நல்லா இருக்கே

    ReplyDelete
  3. குறும்பான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. America athibara pathi pesa sonnalum thalaivaru oru round turn yeduthu marupadiyum athey point ku vararu......

    (Just for fun)

    Very gud kavithai...

    ReplyDelete
  5. arasiyalna america mattum thana?
    all the best
    padma

    ReplyDelete
  6. வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு உளம்கனிந்த நன்றிகள்..?!

    ReplyDelete
  7. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...