July 17, 2010

தோளாகவே மாறிவிடு...!!

ஒரு நாள் மட்டுமாவது
உன்
நெஞ்சுக்குரியவனாக வேண்டும்...!


அந்நாள்
முத்தத்தில் விடிந்து
முத்தத்தில் முடிந்து போக வேண்டும்...!

தனிமை துரத்தி...
தோளில் சாய்ந்து
தோளாகவே மாறிவிடு...!

பகல் மறந்து...,
பசி மறந்து...,
பழையன மறந்து...
பருவ இலை விரித்து...
போதுமெனும் வரை பரிமாறு...!

இலை துடைத்து உண்பது
இவன் கடமை..!

May 20, 2010

ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷ நாள்தான்...

உண்மையை சொல்வதானால்...
உன்னை எல்லா பொழுதும் 

நினைப்பதில்லைதான்...
குறிப்பாக கவிதை எழுதும் 
நேரங்களில்...

ஆனால் எழுதும் கவிதை
உன்னை பற்றியதாய் தான்
இருக்கும்..!!
****************************************
******
என்னிடம் அப்படி என்ன விசேஷம்..? 
என்று
எப்போதும் கேட்கிறாய் நீ...
அதெல்லாம்
தெளிவாக சொல்ல தெரியாது
ஆனால்
உன்னை சந்திக்கும்
ஒவ்வொரு நாளும்
ஒரு விசேஷ நாள்தான்...தோழி..!!
***********************************************
பொழுது போக்க உனக்காக
நான்
பல கலைகள் கற்று வைத்திருக்கிறேன்...


பொழுதுபோக்க எனக்காக
நீ
பல "அழகு" வளர்த்து வைத்திருக்கிறாய்..!

May 19, 2010

உலக ருசியான நீர்...

எப்போதும் கண்ணாடி முன் தன்னை
அலங்காரம் செய்து கொள்ளும்
"தாவணி பெண்" போல
எப்போதும் உன்னை மட்டுமே எழுதி
அலங்காரம் செய்து கொள்கின்றன
"என் கவிதைகள்"...!!
****************************************************
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்-என்
ஒரு கவிதையை நீ படி போதும் அது
சொல்லிவிடும்
என் மொத்த காதலையும்,,,..
*****************************************************
உலக ருசியான நீரில் இரண்டாம் இடம்
சிறுவாணிக்கு தானாம்..
"என்னை கேட்டிருந்தால் நான் சொல்வேன்..!!"என
உன்னை பார்த்தேன்...,
கைகொண்டு தன் உதடு மறைத்தாள்..!!
******************************************************
உறங்கபோகும் முன்
நீ உடுத்தும் இரவு உடை...
நீ உடுத்தியதும்
உறக்கம் கலைகிறது...!!