December 30, 2009

ஒரு காதல் பொழுது...

அவள் விரலுக்கு  சொடுக்கு 

எடுக்கும் போது 

இப்படி கேட்டாள்..

உங்களுக்கு...
"காதல்..,முத்தம்..,அழகு..,
கவிதை..,ஜோக்ஸ்...,
இதைதவிர வேறு எதுவும்
பேச தெரியாதா..?"என்று.

சொடுக்குவதை நிறுத்தி
"வேறு என்ன பேச உலகத்தில்
காதலை விட அழகாய் இருக்கிறது...
சரி நீ சொல்.. 

நான் அதை பற்றி பேசுகிறேன் என்றேன்..?!

ம்ம்ம்...ஒரு மாறுதலுக்காக 

"உலக  அரசியல்" பற்றி பேசுங்கள் என்றாள். 

அப்படியா..சரி
"அமெரிக்க அதிபர்  ஒரு நாளில்.. 

அவர் மனைவியை 
எத்தனை முறை முத்தமிடுவார்..?
என்றேன் கண்சிமிட்டி..

அய்யோ..கடவுளே..?! என்று
என் தலையை குட்டிகொண்டே இருந்தாள்
பிரிய காதலில்....

December 21, 2009

முத்தமும் அவளும்...

முத்ததிற்காக
கெஞ்சிக்கொண்டு நின்றதில்லை
இதுவரை அவளிடம்...!

முத்ததிற்காக
கெஞ்ச வைத்ததில்லை
இதுவரை அவளும்....?!

காதல் கேள்விகள்...



'நம்  பிள்ளை..,

"காதல்" என்று வந்தால்
ஒத்துக்கொள்வீர்களா..?' 

கேட்டாள் அவள். 

நான் சொன்னேன்
"ஒத்துக்கொள்ளமாட்டேன்...

ஆனால்
நானே கற்றுக்கொடுப்பேன்
எப்படி  உயிராக  காதலிப்பது 

என்று..?!"

காதலாய் கிள்ளினாள்.

 


December 4, 2009

"அழகு வங்கி"

பணம் அதிகம்
புழங்கும் 

இடத்தை....,

"பண வங்கி" 

என்று 
அழைக்கும் போது....

அழகு அதிகம்
புழங்கும்..., 

உன்னை..., 

"அழகு வங்கி" 

என்று 
அழைக்கலாமா...?

உன்னை எப்படி அழைக்கட்டும்..?


உன்னை எப்படி அழைக்கட்டும்..

நீயே சொல்லிவிடு..

செல்லம்..,
தேன் மிட்டாயே....,
தேனே..,
என் கண்ணு.., 
குட்டி மா.., 
சக்கரை கட்டி..!! 
கரும்பே...,
ஸ்வீட்டி.., 
கல்கண்டே.., 
முத்தா..,
புஜ்ஜிமா..,
பாப்பு..,
அழகு குட்டி..,
மான் குட்டி..,
மயிலு..,
மல்லிகையே..,
சுவாசமே..,
உயிரே.., 
இதயமே..,
பார்பி செல்லம்..
,குளுகோஸ் குட்டி..,
செல்ல பூஸ்ட்..,
பூவே.., 
ஐஸ் கிரீம் பேபி..,
புது புத்தகமே..!!
செல்ல சிணுங்கி..! 
என் செல்ல சிவப்பு மிளகாயே... 
கண்ணுகுட்டியே.. 
அழகிய தமிழே ...
செல்ல பிசாசே...?! 
அழகு டால்பின் குட்டி மா..!? 




November 29, 2009

கோவைப்பழம்


உலகத்தை சுற்றினால் 
"ஞானப்பழம்" 
கொடுப்பதாய் சொன்னார் 
பரமேஸ்வரன்...?!
உன்னையே உலகமென்று 
பலவருடமாய் சுற்றும் எனக்கு 
ஒரு சின்ன
 "கோவைபழமாவது" 
கொடுப்பாயா..? 
"கோவைப்பழம்" எங்கே என்று 
தேட வேண்டாம்..
உன் 
இதழ்களைத்தான் 
அப்படி சொன்னேன்..!?

November 23, 2009

நம் குழந்தை...

பூங்காவில் விளையாடும்..,
ஒரு 
குழந்தையை பார்த்தும்
என் பக்கம் திரும்பி கேட்டாய்...
'நம் குழந்தை...
உங்களை போல் வேண்டுமா?
இல்லை
என்னை போல் வேண்டுமா?
என்று..
நான் புன்னகைத்தபடி சொன்னேன்...
அழகி..
'நம் குழந்தை..
நம் காதல் போல் 
அழகாய் இருக்கட்டும்' என்று..!


பிடிவாதக்காரி..!



நீ 
எனக்கு 
மிகவும்  பிடித்த...
குறும்புக்கார 
பிடிவாதக்காரி..!?

என் கவிதை..







நீ படிக்காத 
என் கவிதை...
என்ன கவிதை..?!


என் கவிதைக்கு
எது விதை.?-உன் 
எண்ணமே  விதை..?!

November 20, 2009

தனித்துவமானவளே....



நீ 


தனித்துவம் வாய்ந்தவள்..!

மன்னிக்கவும்.., 



எதோடும் 

ஒப்பிட முடியாது 



என்னால்..!

எனக்குள்ளே 

பட்டிமன்றம் நடக்கிறது..

நீ அழகா..?

இல்லை

உன் கையெழுத்து 

அழகா..?

என்று

என்ன 
ஒரு வேதனை...?
ஒரு உயிர்...
இரண்டு உடல்களில் 
பிரிந்து 
கிடக்கிறதே..?!


உன் பார்வை....

என் மொத்தத்தின் 

நங்கூரம்..?!

கனவு....



'கனவு' ஒரு 
வரம்...
நனவில் இல்லாததை 
தரும்...!

கனவு... 
ஆசைகளின் பிரதிபலிப்பு...
'கனவு' 
பெருமூச்சுகளின் பரிசளிப்பு..!?

தளர்ந்த காலத்திலும்
குறையா 
திரைப்பட கொட்டகை...!
வளரும் காலத்தில் 
வளமான 
பொன்னால் தொட்ட கை..!!

November 17, 2009

பால்கோவா பெண்ணே..!



என்
செல்ல 

பால்கோவா பெண்ணே..!
உன்
ஒவ்வொரு 

கண்ணீரும் விழுகையில்....

என்
ஒவ்வொரு 

ஆயுளும் குறைகிறது...?
அதனால்
தயவு செய்து..

இனி 
எப்போதும் அழாதே..!

பிரம்மனின் செல்ல படைப்பே,,.




கருப்பு வெள்ளை
புகைப்படத்தில்கூட...
உன் 
ஒருத்தியால் 
மட்டும்தான் 
அழகாக 
தெரிய  முடியும்..!!
******************************
எந்த நவீன 
புகைப்பட சாதனம் 
கொண்டும் 
உன் அழகை 
சரியாக படம்பிடிக்க முடியாது..!!
****************************************

என் அழகு காய்ச்சலே...



காற்றைக்கூட 
சுகிக்க தெரியாதவனை 
"கவிதை' எழுத செய்தாய் 
சிறு கண்ணசைவில்..!!


தூக்கத்தில் 
பொழுது போக்கியவனை..
'நட்சத்திரங்களை' 
எண்ண வைத்தாய்..!!


சொர்கத்தின் விலாசத்தை 
விசாரித்து திரிந்தவனை...
"ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" 
என 
சொல்லாமல் உணர்த்தினாய்..!!


தோல்விகளில் 
தடுக்கி விழுந்த என்னை 
வெற்றிகளோடு 
கைகுலுக்க செய்தாய்..!!


நன்றி 
என் இனிய மோகினியே..!!


November 14, 2009

"பேரழகிகள்"
















'அழகிகள்'



எல்லாம் 


மனதை தொடுவதில்லை

ஆனால் 



மனதை தொடுபவர்கள் 


எல்லாம் 

"பேரழகிகள்" ஆகி விடுகிறார்கள்..


உன்னை போலவே..!!

கோபம் வராதா...காதலா?





என்மீது உங்களுக்கு

எப்போதும் கோபமே வராதா..?
என்று
ஒரு நாள் திடீரென்று கேட்டாய்..


நான் புன்னைகைத்தபடியே
சொன்னேன்"வரும்..

கொள்ளை கோபம் வரும்..
ஒருவேளை
நீ 

என் அன்பெல்லாம்
மறந்து விலகி போனால்...

வரலாம்..?!
ஆனால் அப்போதும் 

உன்மீதான கோபத்தை..
என்மேல்தான் காட்டிக்கொள்வேனேதவிர..
என் உயிர்மழை
உன்மீது அல்ல...என்றதும்
கண்ணீரோடு சாய்ந்துகொண்டாய்
உனக்கான 

என் தோள்களில்...

November 3, 2009



இன்றும் எடுத்து விட்டேன்
இரண்டு பயண சீட்டு பேருந்தில்...
நீ என்னுடன் இல்லை என்று
ஏற்றுகொள்ளவே முடிவதில்லை 

இந்த பாழ் மனசால்..!! 

அழகான தொந்தரவு....





நீ ஒரு அழகான தொந்தரவு...

ஆனால் 



அடிக்கடி தொந்தரவு செய்யாதே...


தயவு செய்து 

எப்போதும் தொந்தரவு 



செய்து கொண்டே இரு...!

உன் செல்போன்..











இப்படி  
எந்நேரமும் பக்கத்திலேயே வைத்திருப்பாய்  
என்று தெரிந்திருந்தால்.... 
உன் செல்போனாக பிறந்திருப்பேன்...  
இப்படி  
இதயத்தோடு பிறந்து என்ன பயன்?

October 3, 2009

என் 'காதல் கடிதங்களை....'


பெய்த மழையில் 
கால்பங்கு மட்டுமே 


கடலில் கலப்பது போல....
எழுதிய ஆயிரம் 'காதல் கடிதத்தில்'


என்னவள்..
உனக்கு கொடுத்தவை
'ஒன்று' மட்டுமே....?!



மழை நின்ற பிறகு
இலை வழியே
ஒவ்வொன்றாய் வழியும் துளிகளின்
அழகான
ஓசை போல ...
உன்னை கைபிடித்த பின்
கட்டிலுக்கு அடியில் இருக்கும்...
என் 'காதல் கடிதங்களை'
ஒவ்வொன்றாய் மெதுவாய்
படித்து காட்டுவேன்..!!


POEM:
From the lakhs and lakhs of Rain drops only
few drops going to meet ocean...
From my thosands of Letters...
i handled u only one of it...!

One day comes...
when i read and show u all my letters
written to give u..
which where now sleeping down my
wooden show case...!



அம்மா ...

அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..
உயிரை
வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....


அம்மா.....
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'


உன்
அன்பின் கதகதப்பும்,
வலிக்காத தண்டனைகளும்..,
இனி
யாராலும் தர முடியாது..


கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா"
என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??


நீ
இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..
ஆனால் இன்னமும்
என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...


அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!

October 2, 2009

சக்கரை சுமக்கும் சிற்றெறும்பு..

நீ 
நேரில் வர வேண்டாம்..!
நெஞ்சுருக...
நேசம் கூட 

தர வேண்டாம்....!
ஒரே ஒரு வார்த்தை உதிர்ப்பாயா..
என் உயிர் 

சுகப்படும்...?
சொல்வாயா..... 

"நேசிக்கிறேன்" என்று மட்டும் ??


அது போதும் எனக்கு...


'சக்கரை சுமக்கும் சிற்றெறும்பு' போல
சந்தோசமாய்
உன் பெயரை ஆளில்லாத

உயர்ந்த மலையில் 
உரக்க சொல்லி
உயிர் முடிப்பேன்...

நன்றியோடு..?

உன் தாவணியே கட்சி கொடியாகட்டும்..



என் செல்ல சிணுங்கியே...

நீ
ஒரு கட்சி தொடங்கு..,

உன்
தாவணியே கட்சி கொடியாகட்டும்..!?

இன்றைய வாலிபர்கள்...,
முன்னாள் வாலிபர்கள்...,
வருங்கால வாலிபர்கள்...,
இப்படி
எல்லாருடைய ஓட்டும்
உனக்குத்தான் விழும்..!!

ஆனால் நான்தான்..
கட்சியின்
கொள்கை பரப்பு செயலாளர்...

சரியா..??

அழகி.. நீ கடித்த பழத்தை...



அணில்
கடித்த பழம்...
அது
மிக
இனிப்பாக இருக்குமாம்..!!

அழகி..

நீ
கடித்த பழத்தை...
அணிலே...
கெஞ்சி
கேட்டு கொண்டு நிற்கும்...!??

June 28, 2009

நீ கடித்த பழம்..


நீ
கடித்த
எந்த பழமும்....
கெட்டு போவதில்லை என்றால்...
நீ
என்ன
நவீன 
குளிர்சாதனபெட்டியா தோழி?

உன் திருமண பத்திரிக்கை....

நீ 
சுகமாய்
உன் திருமண பத்திரிக்கை 

கொடுத்து போய் விட்டாய்...!

என் 

ஆத்ம நண்பர்களே...
என்னை பார்க்க 

இனி நீங்கள் வருவதாய் 
இருந்தால்.......

அவள் 

என் கடிதத்தை 
கிழித்த
அந்த ரயில் பாலத்தின் 

அருகேயோ..?

தினமும் 

அவள் வரும் 
அந்த பேருந்திலோ..?

பூக்கார அக்காவிடம்...
என் 

துக்கத்தை சொல்லிகொண்டோ..?

தாழிடப்பட்ட 

என் இருண்ட அறையிலோ..?

முத்தமிட்ட கோவிலின் 

பின் புறமோ..?

எங்காவது இருப்பேன்..!!!!

இல்லையென்றால் 


இறந்து போய் இருப்பேன்...
இறந்த சுவடுகூட இல்லாமல்..!